உக்ரைன் அதிபருடன் 35 நிமிடம் பேசிய பிரதமர் மோடி..!
இந்தியர்கள் மீட்பு விவகாரங்கள் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
எஞ்சியுள்ள இந்தியர்கள் அனைவரையும் உக்ரைனிலிருந்து பத்திரமாக தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கனவே முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தற்போதைய நிலவரம் மற்றும் இந்தியர்கள் மீட்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் அரை மணி நேரத்திற்கு மேலாக பேசினார். அப்போது உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் பத்திரமாக வெளியேற தேவையான உதவிகளை வழங்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய பிறகு உடன் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பேசியுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 26ஆம் தேதி இருவரும் தொலைபேசி வாயிலாக பேசி யிருந்தனர்.






