பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு சென்றடைந்தார்.
இந்திய வம்சாவழியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இதை தொடர்ந்து மோடியை அதிபர் மேக்ரான் வரவேற்று அவருக்கு இரவு உணவு விருந்தளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்த பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
வரலாற்று சிறப்புமிக்க பிரெஞ்சு நகரமான முதலாவது இந்திய துணை தூதரகத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி சர்வதேச வெப்ப அணு சக்தி பரிசோதனை உலைத் திட்டத்தை பார்வையிட உள்ளார். முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர் என்பது உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்த உள்ளார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.





