--- --:--:-- --

பூர்வாஞ்சல் விரைவுப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

1

த்தரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்னதாக அவர் போர் விமானத்தில் வந்து அந்த சாலையில் இறங்கினார்.

 

உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து காசிப்போருக்கு 340 ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பூர்வாஞ்சல் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2,500 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

சுல்தான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நாட்டிற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதுகாப்பு முக்கியம் என குறிப்பிட்டார். இந்த சாலை உத்திரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் உதவும் என குறிப்பிட்ட அவர் அந்த மாநிலத்தின் முந்தைய ஆட்சியாளர்களை கடுமையாக சாடினார்.

 

340 கிலோ மீட்டர் வரை சாலையின் 3.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு போர் விமானங்கள் அவசர காலங்களில் இறங்கக் கூடிய ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் வந்து அந்த ஓடு பாதையில் பிரதமர் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

 

விரைவில் தொடக்க நிகழ்ச்சிக்கு பின் விமானப்படை விமானங்களின் சாகசங்களையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon