அல்லுஅர்ஜூன் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை சமந்தா..!
தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது பிரபல நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா.
இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அதில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப்பாடல் இடம்பெறுகிறது.
அந்த பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நடிகை சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






