ஹர்திக் பாண்ட்யாவின் 5 கோடி மதிப்புள்ள வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டதா..?
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மும்பை வந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவின் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பாண்டியா மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது போதிய ஆவணங்கள் இல்லாததால் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த அவர் சட்டபூர்வமாக தான் வாங்கிய அனைத்து பொருட்களையும் தாமாகவே அதிகாரிகளிடம் அளித்ததாகவும் தான் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிகாரத்தை தோராயமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் என்றும், 5 கோடி ரூபாய் என்பது பொய்யான தகவல் என்றும் அவர் விளக்கமளித்தார்.






