--- --:--:-- --

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்..!

1

ஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், அகாலி தள கட்சி நிறுவனருமான பிரகாஷ் சிங் பாதல் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

அவரது உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

 

மறைந்த பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப் மாநில முதலமைச்சராக ஐந்து முறையும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது நினைவு கூறத்தக்கது. அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon