--- --:--:-- --

வெள்ளத்தில் மூழ்கிய கர்ப்பிணி பெண்..!

11

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. களக்காட்டில் கால்வாய் மற்றும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நாங்குநேரி கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதம்பரம் செல்லும் வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

சிதம்பரம் ராஜபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனது மகளை அழைத்து வந்துள்ளார். முருகன், பரமேஸ்வரன், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 4 பேர் நடந்து சென்று பாலத்தை கடக்க முயற்சித்துள்ளனர். எதிர்பாராத விதமாக வெள்ளம் 4 பேரையும் இழுத்து சென்றது.

 

3 பேரும் வெள்ளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். தந்தை, தம்பி, கணவர் கண் முன்னே கர்ப்பிணி பெண் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளார். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon