--- --:--:-- --

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க வாய்ப்பு?

1

மிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மும்முரமாகப் பணியாற்றி வருகிறார்.

 

அதன் ஒரு பகுதியாக 95 கட்சி மாவட்டச் செயலாளர்களை நியமித்த அவர், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் வரும் புதன்கிழமை மாமல்லபுரத்தில் நடைபெறுவதுள்ளது. இதற்காகப் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

மேலும், விழாவைச் சிறப்பாக நடத்த 18 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவையும் கட்சித் தலைமை நியமித்துள்ளது.இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜய் திடீரென சந்தித்துப் பேசினார். இந்நிலையில், தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon