--- --:--:-- --

மயிலுக்கு முதலுதவி அளித்த பெண்ணுக்கு பாராட்டு..!

4

புதுச்சேரியில் பிள்ளையார் குப்பம் பகுதியில் காயங்களுடன் அவதிப்பட்டு வந்த மயிலுக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உதவி செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் இவர்.

 

அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அங்கிருந்த வாய்க்கால் ஒன்றில் மயில் அடிபட்டு காயத்துடன் கிடந்ததைப் பார்த்தார். அந்த மயிலை தனது வீட்டிற்கு கொண்டு சென்று முதலுதவி செய்தார். பின்னர் காவல் துறையினருக்கும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதனையடுத்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம் மயிலை ஒப்படைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon