பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 21 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
நில அதிர்வை உணர்ந்து மக்கள் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வீதிகளுக்கு ஓடினர். மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. நிலநடுக்கத்தில் அங்குள்ள சில கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில் மொத்தம் 26 பேர் உடல்நசுங்கி உயிரிழந்து உள்ளனர்.






