--- --:--:-- --

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!

1

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி (DA) நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 55% அகவிலைப்படி வழங்கப்படுகிறது.அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி – மார்ச் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். அது ஜனவரி மற்றும் ஜூலை மாதம் ஊதியத்தில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

 

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது 55%ஆக இருக்கும் அகவிலைப்படியை 3% உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 

இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மொத்தமாக 58%ஆக உயர்ந்துள்ளது. ஜூலை 2025 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தம் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

Right Menu Icon