--- --:--:-- --

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு..!

1

மிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படி பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தது.தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது.இதனிடையே, கோடை வெயிலின் தாக்கத்தால் பீகாரில் பள்ளி மாணவிகள் மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6 ஆம் தேதிக்கு பதில் ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதேபோன்று புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon