வங்கியின் முன்பாக கதறி அழுத இளைஞர்..!
ஈரோட்டில் கடன் வாடகை செலுத்தியும் வாகனத்தை தர மறுத்ததாக கூறி வங்கியின் முன்பாக இளைஞர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னியம்பாளையத்தை சேர்ந்த தரணிதரன் என்பவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு 5 ஆயிரம் ரூபாய் தவணை செலுத்தி இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.
இதற்காக தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ள நிலையில் கடந்த இரு மாதங்களாக தவணை செலுத்தாததால் இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். தொகையை வீட்டிற்கு வந்து பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தை திருப்பி தருவதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.
ஆனால் ஊழியர்கள் வராததால் வங்கிக்கு சென்று தவணை தொகையை செலுத்த சென்றுள்ளார். ஆனால் வாகனத்தை தர முடியாது என ஊழியர்கள் தெரிவித்ததால் மனமுமடைந்த அவர் தனது வாகனத்தை உடனடியாக திருப்பித் தருமாறு கூறி வங்கி முன் அமர்ந்து அழுதார்.





