ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஒத்திவைப்பு..!
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் ஆளுநர் மாளிகையில் வழங்கப்படுவதாக இருந்த தேநீர் விருந்து திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகைகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிண்டி மற்றும் சுற்றுப்புறத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆளுநர் மாளிகையின் முக்கிய புல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் வர இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக சுட்டிக்காட்டி விருந்தினர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதை தவிர்க்க தேநீர் விருந்தை ஒத்தி வைக்க முடிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மற்றொரு நாளில் தேநீர் விருந்து நடைபெறும் எனவும் அதற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






