--- --:--:-- --

நீட் முதுநிலை மருத்துவ தேர்வு 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..!

12

நீட் முதுநிலை மருத்துவ தேர்வுகள் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரொனா இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் தடுப்புப் பணி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

 

அதில் மருத்துவ மாணவர்களை மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் ஈடுபடுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனுபவம் வாய்ந்த செவிலியர்களும் மூத்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி தடுப்பு பணியில் ஈடுபடுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ மாணவர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் நான்கு மாதங்களுக்கு நீட் முதுநிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு பணிகள் 100 நாட்கள் நிறைவு செய்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon