தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அந்த மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
4 மற்றும் 5ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 6, 7 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






