--- --:--:-- --

பயன்பாட்டிற்கு வரும் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை..!

3

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், வாகன நெரிசலைத் தவிர்க்கும் விதமாகவும், பயணங்களை எளிதாக்கும் விதமாகவும் போக்குவரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் செயல்பாட்டுக்கு வந்தது மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில், முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான 9 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்த வழித்தடத்துக்கான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள போரூர், ஐயப்பன்தாங்கல், குமணன்சாவடி, கரையான்சாவடி உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வருவதால் தங்கள் பயணம் இனி எளிமையாகும் என தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

Right Menu Icon