--- --:--:-- --

வாக்குப்பதிவு நிலவரம்: தமிழ்நாட்டில் டல்… புதுச்சேரியில் கிர்ர்!

Polling 03

தமிழகத்தில் பிற்பகலுக்கு பிறகு வாக்குப்பதிவு மந்தமான நிலையில், புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதே வேகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது; 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நீடிக்கிறது. தமிழகத்துடன், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளாவிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 

தமிழகத்தில் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக வாக்குப்பதிவு இருந்தாலும், நேரம் செல்லச்செல்ல வேகம் குறைந்தது; குறிப்பாக மதியத்திற்கு பிறகு வாக்குப்பதிவு டல் அடிக்கத் தொடங்கியது. இதனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைவாகவே உள்ளது.

 

பிற்பகல் 3 மணி வரையிலான நிலவரப்படி, அசாமில் 68.31 சதவீதமும், கேரளாவில் 58.54 சதவீதமும், புதுச்சேரியில் 67.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிலவரம் குறைவாகவே உள்ளது. இப்போதைய நிலவரப்படி 53.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. கடந்த வருடம் இதே நேரம் 63.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

 

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் வாக்கு சதவீதம். 74.24% ஆகவும், 2019 மக்களவைத் தேர்தலில் 72% ஆகவும் பதிவான நிலையில் கொரோனா காரணமாக பலர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லையோ என்று தோன்றுகிறது. ஒருவேளை வெயில் தணிந்து மாலையில் வாக்குப்பதிவு சூடுபிடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon