கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சிகளோ தனிநபரோ கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதியில்லை..!
கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சிகளோ தனிநபரோ கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் கிராம சபை என்பது அரசியல் சார்பற்றது என்றும் சில அரசியல் கட்சிகள் கிராமசபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் மக்களை குழப்புவதற்காக கூட்டங்கள் நடத்தப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி சட்டத்தின்படி கிராம சபையை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவர், ஊராட்சிகளின் ஆய்வாளர், மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே இருக்கிறது. இதனை கூறியிருக்கும் ஊரக வளர்ச்சித்துறை கிராமசபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ, அரசியல் கட்சிகளோ கூட்டங்களை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கக்கூடாது எனவும் கிராமசபை பெயரை பயன்படுத்தி அரசியல் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கிராமசபை கூட்டங்களை திமுக நடத்தி வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.







