அனுமதி இன்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதிகளில் மண் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் உதவி இயக்குனர் பாலமுருகன் மற்றும் உதவி புவியியலாளர் ஜெகதீசன் ஆகியோர் துறையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பச்சபெருமாள்பட்டி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற பொழுது, டிரைவர் இறங்கி ஓடி தலைமறைவானார்.
விசாரணையில் முறையான அனுமதியின்றி மண் கடத்தப்பட்டது தெரியவந்ததன் பேரில் பாலமுருகன் உப்பிலியபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் லாரியை ஒட்டி வந்தவர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பது தெரிய வந்தது .மேலும் லாரியின் உரிமையாளர் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




