--- --:--:-- --

டாஸ்மாக் கடையை இரவு 10 மணிக்கு மேல் திறக்க கூறி தகராறில் ஈடுபட்ட போலீசார்..!

6

நெல்லை அருகே புறவழிச் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இரவு 10 மணிக்கு மேல் திறக்க வேண்டும் என்று தனிப்பிரிவு போலீசார் சிலர் தகராறில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் திருச்செந்தூர் திசையன்விளை புறவழிச்சாலையில் சுங்கச்சாவடி அருகே டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது.

 

டாஸ்மாக் கடையில் மீரான், பொன்னுதுரை மற்றும் கணேஷ் ராஜ் ஆகிய மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர் . நேற்று இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு மூவரும் கிளம்பியுள்ளனர். அப்போது அங்கு வந்த நாங்குநேரி தனிப்பிரிவு சேர்ந்த போலீசார் சிலர் டாஸ்மாக் கடையை திறக்குமாறு கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஊழியர்கள் மூவரும் கடையை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த போலீசார் ஊழியர்கள் மூவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மூவரும் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பணியாளர்களின் உறவினர்கள் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon