சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்குகிறது..!
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் பதினோரு மணிக்கு தொடங்க உள்ளது. காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பது நடைபெற இருக்கிறது.
எம்எல்ஏக்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என முடிவு வந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஐடி கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்குமே சோதனை நடைபெற்று அவர்களுக்கு நெகட்டிவ் என வந்த பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இன்றைய நிகழ்வில் ஆளுநர் காலை 11 மணிக்கு ஆங்கிலத்தில் உரையாற்றுவார். ஆங்கிலத்தில் உரையாற்றிய பின் சட்டப் பேரவைத் தலைவர் தனபால் தமிழில் உரையாற்றுவார். அது முடிந்த பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.
அதில் ஆளுங்கட்சியை சேர்ந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர் கட்சி சார்பாக எதிர்க்கட்சி தலைவர்களும் இருப்பார்கள்.






