--- --:--:-- --

வீட்டில் முடங்கி சிரமப்படகூடிய திருநங்கைகளுக்கு உதவிய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள்

15

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்ஆய்வாளர் லெட்சுமி மற்றும் காவலர்கள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சின்னப்பா நகரில் வீட்டில் முடங்கி சிரமப்படகூடிய திருநங்கைகளுக்கு இல்லம் தேடி சென்று 10 பேருக்கு 50கிலோ பொன்னி அரிசி வழங்கினார்கள். பின்னர் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

 

மேலும் அங்குள்ள திருநங்கைகளுக்கு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கைகளை கழுவும் முறைகள் பற்றியும், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon