--- --:--:-- --

இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அண்டை நாடுகள் மதிப்பளிக்க வேண்டும்..!

7.1

றையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அண்டை நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் என சீனா மற்றும் பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.

 

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் பிரச்சினை நிலவி வரும் சூழலில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு காணொளி மூலம் நடைபெற்றது.

 

அப்போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் முன்னிலையில் பேசிய மோடி இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு உறுப்பு நாடுகள் பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

மேலும் கொரொனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Leave a Reply

Right Menu Icon