--- --:--:-- --

குடிமங்கலத்தில் போலீஸ் வெட்டிக்கொலை! தமிழகத்தை உறையவைத்த கொடூரம்.. அதிமுக எம்.எல்.ஏ.வை விசாரிக்க முடிவு!

ppppp

டத்துக்குளத்தில், ரோந்து சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக காவல் துறை வட்டாரத்தை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது. படுகொலை செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 1 கோடி நிவாரணம் அளித்துள்ளார். கொலை வழக்கில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனை விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக இருந்து வந்தவர் சண்முகவேல். இவர் வழக்கம்போல் செவ்வாய் கிழமை இரவு, காவலர் அழகுராஜா என்பவருடன் போலீஸ் வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது, இரவு 11.30 மணியளவில் அவருக்கு குடிமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து, அவருக்கு ஒரு தகவல் வந்தது. சிக்கனூர்த்தி பகுதியில் இருக்கும் தோட்டத்து வீடு ஒன்றில் பயங்கர சண்டை நடைபெறுவதாகவும் உடனே போய் விசாரிக்கும்படியும் சண்முகவேலுவுக்கு தகவல் கூறப்பட்டது.

அதன்பேரில், ரோந்து வாகனத்தை சிக்கனூர்த்தி பகுதிக்கு திருப்பினார் காவலர் சண்முகவேலு. காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட தோட்டத்துக்கு போனபோது, அங்கே வயதான ஒருவருக்கும் மேலும் 2 பேருக்கும் இடையே கடுமையான தகராறு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 

இந்த தோட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மூர்த்தி என்பவரது குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். இவர்களில் தந்தை மூர்த்தி மற்றும் அவரது மகன்களுக்கிடையே குடும்பத் தகராறு நடந்து கொண்டிருந்தது. இதில், மூர்த்தியை மகன் தங்கப்பாண்டி கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

 

சம்பவ இடத்திற்கு காவலர் சண்முகவேலு மட்டும் சென்றார்; வாகன ஓட்டுநர் அழகுராஜா, ஜீப்பில் இருந்துவிடார். சம்பவ இடத்தில் மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை, காவலர் சண்முகவேலு விலக்கினார். இந்த மோதலில் படுகாயம் அடைந்த தந்தை மூர்த்தியை, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, சண்முகவேலு ஏற்பாடு செய்துள்ளார்.

 

இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது மகன்கள் தங்கப்பாண்டி மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் ஆவேசத்தில் கொந்தளித்தனர். போதையில் இருந்த இருவரும், தந்தையை தாக்கிய அதே அரியாளால் உதவி ஆய்வாளர் சண்முகவேலையும் சரமாரியாக வெட்டினர். இதில், ஐயோ.. அம்மா என்று அலறியபடி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்த காவலர் சண்முகவேல், அந்த இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின்போது, காவலர் சண்முகவேலுவுடன் சென்றிருந்த காவலர் அழகுராஜாவையும் துரத்திச் சென்று கொலை செய்யப்பார்த்துள்ளனர். ஆனால், வாகனத்தில் இருந்த அவர் தப்பிச் சென்று காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை பதைபதைப்புடன் கூறியிருக்கிறார்.

 

நிகவிடத்திற்கு குடிமங்கலம் போலீசார் வருவதற்குள், தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டன் இருவரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். தமிழக காவல் துறையை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை நிகழ்ந்த இடத்தில், கோவை மேற்கு மண்டலம் ஐ ஜி செந்தில்குமார், சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தி உள்ளார்.

 

தென்னந்தோப்பில் நடந்துள்ள இந்த படுகொலை தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிரது. எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலு வெட்டிக் கொலை செய்யப்பட்ட தென்னந்தோப்பு, அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. எனவே, படுகொலை குறித்து அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். காவல் துறையினருக்கு முதலில் தகவல் தெரிவித்ததும் அவர்தான் என்று சொல்லப்படுகிறது.

 

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவியை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் சண்முகவேலுவின் உடல் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே புதன் கிழமை காலை, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்த மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன், உதவி ஆய்வாளர் சண்முகவேல் மகன் லலித் குமாரிடம் ஆறுதல் தெரிவித்தார். காவலர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது குறித்து எம்.எல்.ஏ. மகேந்திரன் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். இறந்த காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை வழங்க வேண்டும் என்றும் அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஏற்கெனவே கடந்த வாரம் காவலர் ஒருவர் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த அதிர்ச்சி அடங்ககுவதற்குள் மற்றொரு சம்பவம் மடத்துக்குள் நடைபெற்று, தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

 

சட்டம் ஒழுங்கினை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், குற்றச்செயல்களை ஈடுபட துணியாத அளவுக்கு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுகோளாகும்.

Leave a Reply

Right Menu Icon