டிஎம்எஸ் வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியர்கள்.. கைது செய்த போலீஸ்..!
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற எம்ஆர்பி செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் எவ்வாறு செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிஎம்எஸ் வளாகத்திற்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.





