அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய்.. பயணிகளுடன் சாய்ந்த பேருந்து..!
புதுச்சேரியில் ஓட்டுநருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி சாலையோரம் சாய்ந்தது. இதில் பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





