பொங்கல் பரிசாக ரூ. 3,000 வழங்க வேண்டும்: பன்னீர்செல்வம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்குமாறு தமிழக அரசை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க திமுக அரசு ஆணையிட்டது என கூறியுள்ளார்.
இந்த பொருட்கள் தர மற்றவை என்றும் 21 பொருட்களுக்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது எனவும் பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதில் தவறிழைத்த நிறுவனங்களுக்கு மீண்டும் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதை தவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை எனக் கூறிய பன்னீர்செல்வம், பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரொக்கமாக குடும்பத்தாரர்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





