நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!
நீட் நுழைவு தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வுகளுக்கான அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதில் முதற்கட்ட பிரதான தேர்வு வரும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நீட் நுழைவு தேர்வுகள் வரும் மே மாதம் 7ம் தேதியும், க்யூட் தேர்வு வரும் மே 21, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





