--- --:--:-- --

வாரணாசியில் நாளை மோடி வேட்பு மனுதாக்கல் ! இன்று பிரம்மாண்ட பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு

Modi 01

நாடாளுமன்ற தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார். முன்னதாக, இன்று அங்கு பிரசார கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

 

இன்று பிற்பகல் 3:00 மணியளவில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பேரணி செல்கிறார். தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை, இந்த பேரணி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து கங்கை நதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபட உள்ளார். பின்னர் வாராணசி தொகுதியில் நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

 

முன்னதாக , பாஜக தொண்டர்களுடன் காலையில் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதை தொடர்ந்து கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளதாகவும் பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon