எம்.ஜி.ஆர் படத்தின் முதல் காட்சி பார்த்தபோது இருந்த அதே மகிழ்ச்சி – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் தங்களின் ஏகோபித்த வரவேற்பை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தை திரையில் பார்த்தது குறித்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் பல தடைகளை தாண்டி ரிலீஸாகும் போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் போது என்ன மகிழ்ச்சி இருந்ததோ அதே மகிழ்ச்சி இன்று ஜனநாயகன் படம் பார்க்கும் போதும் இருந்தது.” என்று அவர் கூறியுள்ளார்.






