நீரஜ் சோப்ராவின் பெயரில் விளையாட்டு மைதானம்..!
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு மைதானத்தில் உள்ள ஸ்டேடியத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயர் மாற்றப்பட்ட ஸ்டேடியத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்தார்.
இந்த விழாவில் நீரஜ் சோப்ராவும் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.







