--- --:--:-- --

தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்..!

5

ம்பூர் அருகே பாம்பு கடித்து 13 வயது சிறுமி உயிர் இழந்தது சந்தேகம் இருப்பதாக கூறி உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பகுதி சேர்ந்த சிறுமி அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துள்ளார். நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சிறுமி விஷ பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

 

உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு மாணவி அழைத்து செல்லப்பட்ட பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் உடலில் பாம்பு கடித்ததற்கான தடயங்கள் இல்லை எனக்கூறி ரு சந்தேகத்தின் பேரில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon