--- --:--:-- --

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 விழுக்காடு இருக்கைகளை பயன்படுத்த அனுமதி..!

1

ரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 விழுக்காடு இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

 

இருப்பினும் பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

 

பின்னர் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் 60 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 விழுக்காடு இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தேவைக்கேற்ப பேருந்து சேவைகளை அதிகரித்துக்கொள்ளவும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு அனுமதியளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon