கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்..!
கன மழை மற்றும் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். கடலூர் மாவட்டத்தில் புயலால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.
அங்கு மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் முதலமைச்சர் இன்று பார்வையிட உள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திப்பார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் செல்லவுள்ளார்.






