--- --:--:-- --

இனிமேலும் திமுகவிற்கு மக்கள் தக்க தண்டனை கொடுப்பார்கள்

5

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தினத்தந்தி நாளிதழின் மறைந்த அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் பகுதியில் மணிமண்டபம் கட்டப்பட்டது.

 

இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக கூறினார்.

Leave a Reply

Right Menu Icon