கொரொனாவால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கொரொனாவல் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னவாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் கொரொனா தொற்றால் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மயானத்திற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் செய்யாறு வட்டாட்சியர் மூர்த்தி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் மூதாட்டி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதைப்போல் செய்யாறு காமராஜர் நகரைச் சேர்ந்த பாத்திமா என்பவரும் கொரொனா தொற்றால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் முஸ்லிம்கள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.







