--- --:--:-- --

ராட்சத மலைப்பாம்பை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்..!

2

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ராட்சத மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள் அதனை காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அன்னவாசல் அருகே உள்ள பணகுடி காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாறைக்குள் மலைப்பாம்பு ஒன்று பத்துக்கும் மேற்பட்ட முட்டைகளுடன் இருந்துள்ளது.

 

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து பாம்பை பிடித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மற்றும் அதன் பத்துக்கும் மேற்பட்ட முட்டைகளுடன் இருந்ததை பார்த்து முதலில் அச்சம் அடைந்த போலீசார் பின்பு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து முட்டைகளையும் ஒப்படைத்தனர். இதன் பிறகு அவற்றை வனத்துறையினர் காட்டில் விட்டனர்.

Leave a Reply

Right Menu Icon