நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும்..!
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் வரும் 16ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16ஆம் தேதி காலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19-ஆம் தேதி வரை தொடங்க உள்ளதால் கூட்டத்தொடரில் எடுக்க வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







