--- --:--:-- --

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சிக்குழு இன்று டெல்லி பயணம்..!

1

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று டெல்லி செல்லும் தமிழக அனைத்து கட்சி குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து அனைத்து கட்சி கூட்டத்தை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வலியுறுத்த உள்ளனர்.

 

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி டெல்லி சென்று மத்திய அரசை பரிந்துரை முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்கு தமிழக அனைத்து கட்சி குழு இன்று மதியம் செல்கிறது.

 

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவில் திமுக, அதிமுக, பாஜக கம்யூனிஸ்ட், திமுக கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க உள்ளனர். அதை தொடர்ந்து நாளை மதியம் துறை அமைச்சரை சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon