அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை முயற்சி..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகே தற்கொலைக்கு முயன்ற நபரை அந்த பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த இளைஞர் திடீரென்று மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
விசாரணையில் கொலை செய்தவரின் பெயர் சந்திரபாபு என்பதும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.





