வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை எனக்கூறி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல நூற்றுக்கணக்கான மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
ஆனால் இரவு நேரத்தில் போதிய பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை எனக் கூறி அங்கிருந்த காவல்துறையினரிடம் அவர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.





