வளர்ப்பு மகன் போதைக்கு அடிமையானதால் பெற்றோர் தற்கொலை..!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி, மாரியம்மாள் தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் அஜித்குமார் என்பவரை தத்தெடுத்து வளர்த்தனர்.
மதுப்பழக்கத்திற்கு அஜித்குமார் அடிமையானதால் மன உளைச்சலில் இருந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனால் மதுபோதையில் காவல் நிலையம் சென்ற வளர்ப்பு மகன் தனது பெற்றோர் சாவிற்கு தான் காரணமில்லை என கூறினார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த அவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.






