இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.






