பெண் சிசு கொலையில் பெற்றோர் கைது..!
மதுரை உசிலம்பட்டி அருகே பெண் சிசு மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த பெற்றோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் பெண்சிசு உயிரிழந்ததாக கூறி வீட்டின் அருகிலேயே அந்த பெற்றோர் புதைத்துள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். சுகாதாரத்துறையினரும் அந்த குழந்தையை கேட்ட போது குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலைய போலீசார் அங்கு விசாரணை நடத்த சென்ற பொழுது பெற்றோர் அங்கிருந்து உடனடியாக தப்பி தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





