இன்ஸ்டாகிராம் நிர்வாகம் மீது அமெரிக்காவில் பெற்றோர் வழக்கு..!
இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் தனது மகள் அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதை நிர்வகிக்கும் நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வரிசையில் இன்ஸ்டாகிராம் உலக அளவில் பிரபலமாக உள்ளது.
11 வயது மகள் அதற்கு அடிமையாகி விட்டதாகவும் இதனால் அவர் சரியாக உணவு உண்ணுவதுடன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நியூயார்க்கில் உள்ள பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். சில சமயங்களில் தற்கொலை எண்ணமும் தங்கள் மகளுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
தனது மகளின் இன்ஸ்டாகிராம் கணக்கை அழித்துவிட்டு அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.






