மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்த ஆசிரியர்..!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஆபாச படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக வைத்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். அரசு உயர்நிலைப்பள்ளியில் மகேஷ் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன் ஆபாசமாக படமெடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் மாணவியின் ஆபாசபடம் வெளியானதால் திருமணம் தடைபட்டு போனது.






