சிக்கன் கடையில் பயங்கரம்.. திடீரென வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு..!
சென்னை அடுத்த குன்றத்தூரில் கறிக்கடைக்குள் புகுந்து இளைஞரை சரமாரியாக வெட்டியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குன்றத்தூரை சேர்ந்த நபர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவரது கடைக்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பத்ம குருவை சரமாரியாக தாக்கி விட்டு வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்த பத்ம குரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கு விவகாரத்தில் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.





