வட மாநிலத்தவரை தாக்கி பணம் பறிப்பு..!
தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளரை தாக்கி அவரிடம் இருந்து 13,000 பணத்தை பறித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிக்கி என்பவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆறாம் தேதி இரவு துறைமுகம் திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் லாரி நிறுத்திவிட்டு தேனீர் குடிக்க சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த 13,000 பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.






