--- --:--:-- --

பாகிஸ்தானில் நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவு

1

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இதன் தாக்கம் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உணரப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், டெல்லி, சண்டிகர், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் மாலை 4.30 மணி அளவில் நடுக்கம் உணரப்பட்டது.

 

நிலநடுக்கத்தால் வீடுகளும், வணிகக் கழகங்களும் குலுங்கின. இதனால் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பீதியடைந்தனர் பல இடங்களில் சாலைகளில் பிளவு ஏற்பட்டது. வாகனங்களும் மின் கம்பங்களும் சேதமடைந்தன. இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பல இடங்களில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது நினைவு கூறப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon